'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க?'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை கொரோனா பாதிப்பு உலுக்கி கொண்டிருக்கும் வேளையில், முதல்முதலாக வைரஸ் பாதிப்பு தோன்றிய நாடான சீனாவில் நீண்ட நாட்களாக வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாததால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அங்கு மாஸ்க் அணிவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட்ட பின் வைரஸ் பரவல் மீண்டும் ஏற்பட்டதால், ஜூன் மாதம் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் அங்கு இரண்டாவது முறையாக இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் இல்லாதபோதும் மாஸ்க் அணிவதால் பாதுகாப்பாக உணருவதாக கூறும் பெய்ஜிங் மக்கள் இன்னமும் மாஸ்க் அணிந்தே வெளியே சென்று வருகின்றனர். அத்துடன் கட்டுப்பாடுகளை அரசே தளர்த்தியுள்ளபோதும் மாஸ்க் அணியவேண்டுமென்ற சமூக அழுத்தம் இருப்பதாகவும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.