'ஜிம் ஜாங் உடன் தென்படும் பெண்'... 'ஓஹோ இவரா அது'... 'ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்'... மனைவி தங்கை எங்கே?
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரிய அதிபர் ஜிம் ஜாங் உடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக இணைந்துள்ள பெண்ணால் பல சந்தேங்ககள் எழுந்துள்ளன.

வட கொரிய அதிபர் ஜிம் ஜாங் உன் எங்கு அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டாலும் அவருடன் அவரது தங்கை Kim Yo-jong தான் உடன் இருப்பார். இந்த சூழ்நிலையில் ஜிம் ஜாங்யின் தற்போதைய பயணங்களில் Hyon Song-wol இடம்பெற்றுள்ளார். அவர் யார் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர் பிரபல பாப் பாடகி என்ற தகவல் வெளியானது. அதோடு அவர் ஜிம் ஜாங்யின் முன்னாள் காதலி என்பது கூடுதல் தகவல். தற்போது ஜிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அனைத்து பயணங்களிலும் Hyon இடம்பெற்றிருப்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு விருந்தினர்களை அழைத்து வந்து அமர வைப்பது. அவர்கள் ஜிம் ஜாங்கிற்கு கொடுக்கும் மலர்க்கொத்துக்களை வாங்கி வைத்துக் கொள்வது போன்ற பணிகளை Hyon செய்து வந்துள்ளார். இதற்கு முன்பு இந்த பணிகள் அனைத்தையும் அவரது தங்கை Kim Yo-jong தான் செய்து வந்தார். அவர் அந்த அரசு நிகழ்ச்சியில் ஒரு ஓரமாகப் பேசாமல் அமர்ந்து இருந்ததாக டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜிம் ஜாங் உன்னிற்கு பிறகு அவரது தங்கை Kim Yo-jong அதிபர் பதவியை ஏற்பார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவியும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தைக் கிளப்பி இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஜிம் ஜாங்யின் மனைவி கர்ப்பமாக இருக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது.

மற்ற செய்திகள்
