'9000 ஊழியர்களை' பணியிலிருந்து நீக்கும் 'நிறுவனம்...' 'பிரபல' பணக்கார 'நிறுவனத்தின் 'ஊழியர்களுக்கே' இந்த நிலை...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 21, 2020 04:25 PM

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 9000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Rolls-Royce company decides to lay off 9,000 employees

பிரபல ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பு மட்டுமின்றி விமான எஞ்ஜின்கள் தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. கொரோனா பாதிப்பால் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்நிறுவனம் பலத்த இழப்பை சந்தித்துள்ளது.

போயிங் 787 மற்றும் ஏர்பஸ் 350 ரக விமானங்களுக்கு எஞ்ஜின் தயாரிக்கும் இந்த கம்பெனி தொழில் முடக்கத்தால் தனது தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு பிந்தைய புதிய சூழலில் உருவாகும் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதன் தலைமை அதிகாரி வாரன் ஈஸ்ட் தெரிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் 52 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.