VIDEO: ஒரு குடையோட பெரிய 'அக்கப்போராக' அல்லவா உள்ளது...! 'விரிச்சா மடங்கிக்குது... அப்புறம் சேட்டிலைட் டிஷ் குடை மாதிரி நிக்குது...' - டிரென்டிங் ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jul 29, 2021 04:19 PM

பிரிட்டன் பிரதமர் குடை விரிக்க மல்லுக்கட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Prime Minister Boris Johnson struggle with an umbrella

பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துக் கொண்டுள்ளார். பொதுவாகவே பிரதமர் பங்கேற்கும் விழாக்களில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், பிரிட்டன் பிரதமர் கலந்துகொண்ட விழாவில் வாய்விட்டு சிரிக்கும்படியான காமெடியான ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியின் நடுவே மழை பெய்துள்ளது. அதன்காரணமாக பிரதமர் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் குடை வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குடையை விரித்து மழையில் இருந்து தப்பித்த நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு குடையை விரிக்க தெரியாததால் நீண்ட நேரமாக அதனுடன் மல்லுக்கட்டியுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு ஒருவழியாக குடையை விரித்தாலும், மீண்டும் குடை மூடிக்கொள்ள அதை உபயோகிக்க தெரியாமல் போரிஸ்  குடையுடன் மல்லுக்கட்டியுள்ளார்.

குடையை விரித்தபோது தானாக மடங்கியது.  பின்னர் ஒருவழியாக கஷ்டப்பட்டு குடையை விரித்தார். ஆனால் மீண்டும் தானாக மடங்கி கொண்டது. பின்னர் குடையை இரு கைகளாலும் முட்டுக் கொடுத்து பிடித்திருந்தார். அவரது நிலையை பார்த்து அவருக்கே சிரிப்பு வந்தது. கடைசியில் சேட்டிலைட் டிஷ் போல குடை மேற்பக்கமாக விரிந்து கொண்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Prime Minister Boris Johnson struggle with an umbrella | World News.