"நாலாவது தடவையா கல்யாணம் பண்ணிக்க 'பொண்ணு' தேடும் 'இளைஞர்'... அதுக்காக 'மத்த' 3 'மனைவி'களும்... சேந்து செய்யுற 'விஷயம்' தான் 'ட்விஸ்ட்'டே!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Nov 18, 2020 04:34 PM

பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் (Siyalkot) என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அட்னான். 20 வயதான அட்னான், தனக்கு திருமணம் செய்து கொள்ள பெண் ஒருவரைத் தேடி வருகிறார்.

pakistan 20 yr old young with three wives searching for fourth

தான் முதலாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டி அட்னான் பெண் தேடவில்லை. இதுவரை 3 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வரும் அட்னான், தற்போது நான்காவதாக பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வருகிறார்.

இதில் உச்சகட்ட சுவாரஸ்யம் என்னவென்றால், தனது கணவருக்காக 3 மனைவிகளும் இணைந்து பெண் தேடி வருகின்றனர். தனது 16 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட அட்னான், அதன் பிறகு சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கு முன்னர் மூன்றாவதாக அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது 3 மனைவிகளின் பெயர்கள் ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகும். மூன்று மனைவிகளின் பெயரும் 'S' என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய அட்னான் விருப்பம் தெரிவித்துள்ளார். 'மாதத்திற்கு எனக்கு 1 முதல் 1.15 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், எனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது' என அட்னான் தெரிவித்தார்.

மூன்று மனைவிகள் உள்ளதால் அவர்கள் மாறி மாறி அல்லது அட்னானுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அது அல்ல. மூன்று மனைவிகளுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அட்னான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பது தான். அதே போல, தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து அட்னானை மாறி மாறி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pakistan 20 yr old young with three wives searching for fourth | World News.