சொந்த கல்யாணத்தோட.. வரவேற்பை மிஸ் பண்ணிய தம்பதிகள்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள், தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாமல் போன சம்பவமும் அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | சாலை ஓரத்தில் வாழ்ந்து.. உயிரிழந்த மூதாட்டி.. சுருக்குப் பையை திறந்ததும் கலங்கி போன போலீஸ்!!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் விக்டோரி மற்றும் பனவ் ஜா ஆகியோர். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் மிக விமரிசையாக திருமணம் நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விக்டோரி மற்றும் பனவ் ஜா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே தினம் மாலை பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த ஹோட்டலின் 16 ஆவது மாடியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
திருமணம் முடிந்த கையுடன் அந்த தம்பதி இருவரும் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்கும் தயாராகி இருந்தார்கள். தொடர்ந்து அந்த சொகுசு ஹோட்டலில் 16 ஆவது மாடிக்கு செல்வதற்காக அவர்கள் இருவரும் லிப்ட்டில் ஏறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், தரை தளத்திற்கும் முதல் தளத்திற்கும் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே செயல்படாமல் நின்று விட்டதாகவும் தெரிகிறது.
இதனால் கடும் பரபரப்பு நிலவே, உடனடியாக இது பற்றி பழுது பார்க்கும் ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட, அவர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களாலும் சரி செய்ய முடியவில்லை என தெரிகிறது. தொடர்ந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்ட சூழலில், அவர்கள் பல முயற்சி மேற்கொண்டும் அது பயனளிக்கவில்லை என தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners.
அந்த லிஃப்ட்டிற்குள் புதுமணத் தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர். சுமார் இரண்டரை மணி நேரம் எப்படி வெளியே வருவது என தெரியாமல் தவித்துள்ள சூழலில், நான்காவது மாடிக்கு சென்று லிஃப்ட்டின் மேல்புறம் இருந்து உடைத்து கயிறு கட்டி ஒவ்வொருவராக பாதுகாப்பாக வெளியே மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படைகளில் ஒருவரான டேவிட் பட் என்பவர், விக்டோரி மற்றும் பவன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடந்த சம்பவம் பற்றி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதே போல, இந்த திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் வாழ்க்கையில் இது போல சோதனைகள் வரும் அதை எதிர்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சொந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மிகவும் தாமதமாக அவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | கோவிலுக்குள் திருட முயன்று... கடைசியில அங்கேயே உயிரிழந்த திருடன்... நடந்தது என்ன??