VIDEO: எங்கள அடிக்குறாங்கய்யா...! 'காப்பாத்துங்க...' 'சவூதியில் கதறி அழும் தமிழக இளைஞர்...' உள்ளத்தை நொறுங்க செய்யும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சவூதி அரேபியாவிற்கு ஓட்டுனர் வேலைக்கு வந்த தன்னை கொத்தடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க விடுவதாக கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர்.
![Kallakurichi youth forced camel grazing saudi desert video Kallakurichi youth forced camel grazing saudi desert video](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kallakurichi-youth-forced-camel-grazing-saudi-desert-video.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் கிராமத்தில் டிப்ளமோ படிப்பு படித்த மனோஜ் என்னும் இளைஞர், கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக சவுதி அரேபியாவுக்கு ஓட்டுநர் வேலைக்கு சென்றுள்ளார்.
சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து டூரிஸ்ட் விசாவில் சென்ற மனோஜ், தன்னை இரண்டு மாதங்கள் மட்டுமே ஓட்டுநர் வேலை செய்ய அனுமதித்ததாகவும், அதன் பின் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விடுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது மனோஜ் தன் தந்தைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மனோஜ் அனுப்பிய வீடியோவில், 'தனக்கு இங்கு வெறும் பண் மட்டும் சாப்பிட தருவதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கை கால் எல்லாம் வலிக்கிறது, என்னால் முடியவில்லை அப்பா, காப்பாத்துங்க' என கண்கலங்கி அழுது வீடியோ அனுப்பியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)