Valimai BNS

20 வருஷமா நடந்த எதுவுமே நியாபகம் இல்ல.. முந்தின நாள் இரவில் சொன்ன சின்ன விஷயம்.. சில்லு சில்லாக நொறுங்கிய கணவன்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 24, 2022 08:56 AM

இங்கிலாந்து: இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது பத்திரிக்கையாளர் பெண் ஒருவர் தன் 20 வருட சுய நினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

mother suffers cold and loses 20 years of self-remembering

கிளாரி மஃபெட்-ரீஸ் (Claire Muffett-Reece) என்ற 43 வயதான பெண் ஒருவர் இங்கிலாத்தின் எசெக்ஸ் (Essex) பகுதியில் வாழ்ந்து வருகிறார். பத்திரிக்கையாளரான கிளாரியின் கணவர் ஸ்காட் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு 11 வயதில் ஜாக் என்ற மகனும் 9 வயதில் மேக்ஸ் என்ற பெண்ணும் உள்ளனர்.

ஜலதோஷம்:

இந்நிலையில் கிளாரிக் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஜலதோஷம் பிடித்துள்ளது. இவர் தன் மகன் ஜாக்கிடம் தனக்கு இரவில் தனக்கு ஜலதோஷம் பிடித்ததாக கூறிய நிலையில் மறுநாள் வரை அவர் எழுந்திருக்கவில்லை. சுமார் 16 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். இதனை அறிந்த மகன் மற்றும் கணவன் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

படுக்கைக்கு சென்ற கிளாரி எழவே இல்லை:

இதுக்குறித்து மூளையழற்சி தினத்தின் போது, பேட்டியளித்த கிளாரி மற்றும் ஸ்காட் பேசும் போது, 'ஜலதோஷம் என்று சொல்லிவிட்டு முந்தைய நாள் படுக்கைக்கு சென்ற கிளாரி எழவே இல்லை. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போதுதான் அவளுக்கு என்செபாலிடிஸ் நோய் இருப்பது தெரிய வந்தது.

நினைவுகள் போனது:

பின்னர் தீவிர சிகிச்சையில் இருந்த அவள் இரண்டு வாரத்திற்கு கோமாவில் இருந்தால். சுமார் 16 நாட்கள் கழித்து தான் சுய நினைவை எட்டினாள். அந்த நேரத்தில், அவள் கர்ப்பம் பிரசவம், மற்றும் முக்கிய விடுமுறை நாட்களை எல்லாம் கூட மறந்து விட்டாள்' என கிளாரியின் கணவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட, கிளாரிக்கு அவரின் 20 வருட சுய நினைவு இல்லை. அதனை மீட்டேடுக்க முயற்சி செய்து வருவதாகவும் மருத்துவக்குழு கூறியுள்ளது.

Tags : #COLD #SELF-REMEMBERING #சுய நினைவு #ஜலதோஷம் #அம்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother suffers cold and loses 20 years of self-remembering | World News.