போர் வேண்டாம்னு போர்டு தூக்கிய பெண் பத்திரிக்கையாளர் மாயமா?.. ரஷ்யாவில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு தொலைக்காட்சி நேரலையில் எதிர்ப்பு தெரிவித்த பெண் பத்திரிக்கையாளர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 2 வாரங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதில் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல் ரஷ்யாவில் போருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் போருக்கு எதிராக குரல் கொடுத்தது கவனம் பெற்றது. அதில், ரஷ்யாவின் பெர்வி கானால் என்ற அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு பதாகையுடன் இளம் பெண் பத்திரிகையாளர் வந்து நின்றார்.
அதில், ‘போர் வேண்டாம், போரை நிறுத்தங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். இங்கிருந்து உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை’ என எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Diversion during Channel One main state TV evening show tonight - a woman with No to War poster yells stop the war. Channel One already "probing the incident regarding the outsider's presence during live broadcast." pic.twitter.com/wHyV9lyHZe
— Mary Ilyushina (@maryilyushina) March 14, 2022
அந்த பெண்ணின் பெயர், மரினா ஓவ்ஸியானிகோவா என்றும், அவர் பெர்வி கானால் செய்தி ஊடகத்தில் எடிட்டராக பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது. தற்போது இவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவம் மரினா ஓவ்ஸியானிகோவாவை கைது செய்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.