‘கரப்பான் பூச்சியை கொல்ல வித்தியாசமாக முயன்ற நபர்’.. ‘வெடித்து சிதறிய தரை’..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 23, 2019 08:46 AM
கரப்பான் பூச்சியை கொல்வதற்காக பெட்ரோல் ஊற்றிய போது நிலப்பகுதி வெடித்து சிதறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் எனியாஸ் என்ற பகுதியை சேர்ந்த சீஸர் செமிட்ஸ் என்பவர் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கரப்பான் பூச்சி அதிகமாக இருந்த ஒரு துளையில் பெட்ரோலையும், பூச்சி மருந்தையும் கலந்து ஊற்றியுள்ளார். ஆனாலும் துளைக்கு மேலே கரப்பான் பூச்சிகள் உலாவிக் கொண்டு இருந்துள்ளன.
இதனால் அந்த துளையில் சில தீக்குச்சிகளை உரசிப் போட்டுள்ளார். அப்போது நிலப்பகுதி திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக சீஸர் செமிட்ஸ் காயமின்றி உயிர் தப்பினார். கரப்பான் பூச்சிகள் அதிகமான கழிவுகளை சேர்த்து வைத்திருந்ததால், அதில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி வெடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுக்கிறது.
Dude went to the Yosemite Sam school of how to deal with critters. pic.twitter.com/40ElxsFPem
— Klara Sjöberg (@klara_sjo) October 20, 2019
