‘விடாமல் துரத்திய பன்றி’... ‘லைவ் பண்ணும்போது’... ‘ரிப்போர்ட்டருக்கு நேர்ந்த சோகம்’... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Nov 27, 2019 04:29 PM
நேரலையில் செய்தி வழங்க முயன்ற நிருபரை, நிற்க விடாமல் பன்றி ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரீஸ் நாட்டில் ANT1- தொலைக்காட்சியில், குட் மார்னிங் கிரீஸ் என்னும் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது, கிரீஸ் நாட்டை தாக்கிய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, கினிட்டா பகுதியில் இருந்து நிருபர் லாஸோஸ் மாண்டிகோஸ், நேரலை கொடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். நேரலை துவங்கியும், சில விநாடிகள் வரை நிருபர் லாஸோஸ் மாண்டிகோஸ் கேமரா முன் தோன்றவில்லை. இதனால் குழப்பமடைந்த கேமரா ஆப்ரேட்டர் சில விநாடிகள் கழித்து அவரைப் பார்த்தார்.
அப்போது, நிருபர் மாண்டிகோஸை, அங்கு பக்கத்திலுள்ள பண்ணையிலிருந்து தப்பித்து வந்த பன்றி ஒன்று துரத்தி கொண்டிருந்தது. இதைக் கண்டதும் கேமராமேன் அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் சில விநாடிகள் கழித்து மாண்டிகோஸ் கேமரா முன் நின்று புயல் மற்றும் வெள்ளம் குறித்த லைவ் அப்டேட்களை வழங்க முயன்றார். அப்போதும் பன்றி அவரை விடாமல் துரத்த, நிருபர் கேமராவைச் சுற்றி ஓடத் தொடங்கினார்.
எப்படியாவது புயல் மற்றும் வெள்ளம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க முயன்றும், கடைசியில் முடியாமல் போனது. ஏனெனில் அந்த நிருபரை பன்றி தொடர்ந்து துரத்தி வந்து கடித்தது. இதனைப் பார்த்து செய்தி சேனலில், செய்திகள் வழங்க காத்து இருந்தவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து லைவ் ஆக ஒளிபரப்பான இந்த காட்சிக்கு, நிருபர் மன்னிப்பு கேட்டார். கடைசிவரை செய்திகளை வழங்க முடியாமலேயே, நேரலை நிறுத்தப்பட்டது.
Greek journo pestered by a pig while reporting on the recent floods in #Kinetta #Greece #tv #bloopers #ant1tv #Ant1news pic.twitter.com/vsLBdlWCMB
— Kostas Kallergis (@KallergisK) November 26, 2019