'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (25-09-2020) ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,679 பேரில் 5,671 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,69,370 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,386 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,926 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 661 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,626 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,13,836 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 37 பேர், தனியார் மருத்துவமனையில் 35 பேர் என மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9148 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 93,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.