"எபோலா மாதிரியே இன்னொரு வைரஸ்.. இரண்டு பேருக்கு பாசிட்டிவ் ஆகிருக்கு"..பகீர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், எபோலா போன்ற மற்றொரு வைரஸ் தாக்குதலால் இரண்டு பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Also Read | "Road ஓரத்துல தான் தங்குறேன்".. தலைமறைவான கணவன்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்த கர்ப்பிணி பெண்..!
எபோலா
ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கடந்த 1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருக்கும் எபோலா ஆற்றுக்கு அருகில் இந்த வைரஸ் அதிகமாக பரவியதால் இந்த வைரஸுக்கு எபோலா என பெயரிட்டனர். அதன்பிறகு 2014-16 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், 2018-19 ல் மத்திய ஆப்பிரிக்காவிலும் எபோலா கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகம் என்பதால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்டு அரசுகள் திணறிவந்தன. இதற்கான சரியான சிகிச்சை வழிமுறைகள் இல்லாததும் இந்த துயரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இன்னொரு வைரஸ்
இந்நிலையில் எபோலா குடும்பத்தை சேர்ந்த மார்பர்க் வைரஸ் தாக்குதல் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் ஆகியிருப்பதாகவும் அந்த இருவரும் உயிரிழந்திருப்பதாகவும் கானா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இம்மாத துவக்கத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாகவும் அவர்கள் சில நாட்களிலேயே மரணமடைந்ததாகவும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கானாவில் நடத்தப்பட்ட சோதனைகள் ஜூலை 10 அன்று மீண்டும் பாசிட்டிவ் என்றே வந்திருக்கிறது. இருப்பினும், செனகலில் உள்ள ஆய்வகத்தால் முடிவுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஆணையம் அறிவித்திருக்கிறது.
பரவும் விதம்
இந்த வைரஸ் பழந்தின்னும் வௌவால்கள், சிம்பன்ஸி, கொரில்லா, முள்ளம்பன்றிகள் ஆகியவை மூலமாக பரவலாம் என நம்பப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் இருக்கும் விலங்குகளின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் மூலமாக, பரவுவதாக சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்த நபர்களுக்கு தலைவலி, காய்ச்சல், தசை வலி, வாந்தி இரத்தம் மற்றும் இரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
மேலும், குகைகளுக்கு அருகே வசிக்க வேண்டாம் எனவும், இறைச்சிகளை நன்கு சமைத்த பின்னர் உண்ணுமாறும் மக்களுக்கு எச்சரித்திருக்கிறது கானா அரசு. மேலும், நோய்த்தாக்குதல் இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்குமாறும், உயிரிழப்புகளை தடுக்கும் சக்தியை இது மேம்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கானாவில் எபோலா போன்ற மற்றொரு வைரஸ் தாக்குதலால் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.