"திரும்புற பக்கம் எல்லாம் இந்த மீம் வீடியோ தான்"... 'கோட்', 'சூட்' போட்டுக்கிட்டே சவப்பெட்டி டான்ஸ்... 'இவங்க' யாருன்னு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். டிவி, மொபைல் போன், இணையதளம் என அனைவரும் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்ட மீம் விடீயோக்களின் இறுதியில் சில நபர்கள் இணைந்து சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஆடும் வீடியோ ஒன்று வைரலானது. திரைப்படம் அல்லது ஏதேனும் காமெடி ஆல்பம் என மக்கள் நினைத்தனர். ஆனால் அந்த வீடியோவில் வருபவர்கள் உண்மையாகவே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.
ஒருவரின் இறுதிசடங்கின் போது நமது பகுதிகளில் உடலின் முன்னால் நடனமாடி செல்வது வழக்கம். அதை போன்று உலகம் முழுவதும் நடனமாட குழுக்கள் உள்ளன. அப்படி கானா நாட்டை சேர்ந்த ஒரு குழுவின் வீடியோ தான் அது. கானா நாட்டிலுள்ள பெஞ்சமின் ஐடோ என்பவற்றின் தலைமையில் இயங்கும் இந்த நடனக்குழு, இறுதிச்சடங்கில் நடனமாட மற்றும் சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு நடனமாடவும் இயங்குகிறது.
இந்த நடனக்குழு ஆரம்பித்த சில நாட்களிலேயே கானா நாடு முழுவதும் பிரபலாமானது. பலர் தங்களது வீட்டில் மரணம் நிகழ்ந்தால் இறுதி சடங்கிற்கு பெஞ்சமின் குழுவை அழைக்கின்றனர். அது மட்டுமில்லாது, கானாவில் வேலையில்லா திண்டாட்டம் இருந்த போது நூறு இளைஞர்களுக்கு இந்த குழுவின் மூலம் வேலையளித்துள்ளார் பெஞ்சமின் ஐடோ. தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த வலியிலிருந்து அவர்களை மீது கொண்டு வருவதே எங்களின் நோக்கம் என்கிறது அந்த குழு.
இந்த சவப்பெட்டி நடனம் யூ-டியூபில் மிகவும் பிரபலம் என்றாலும், தற்போது மீம்ஸ்கள் மூலம் அதிகம் பிரபலமாகி வருகிறது. பல நாடுகள் இந்த மீம்ஸ்களை பயன்படுத்தி மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.