‘2018-ல் கதிகலங்க வச்ச வைரஸ்’!.. ‘மறுபடியும்’ பரவத் தொடங்கிய அதிர்ச்சி.. 4 பேர் பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்காங்கோவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 63 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை கடந்து ஆப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. குறைவான சுகாதார கட்டமைப்புக் கொண்ட அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலோ வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா வைரஸால் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்டகா நகரில் 4 பேர் எபோலோ வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் எட்னி லாங்கோண்டோ, பண்டகா நகரில் எபோலோ வைரஸ் பரவல் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும், அதற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் எபோலோ வைரஸால் 2,280 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
The new #Ebola outbreak in Mbandaka #DRC represents a challenge, but it's one we are ready to tackle. @WHO has worked w/ @MinSanteRDC, @AfricaCDC & partners over the years to strengthen capacity to respond to outbreaks. With each experience we respond faster & more effectively. pic.twitter.com/SKc6GnI4q4
— Dr Matshidiso Moeti (@MoetiTshidi) June 1, 2020