கொஞ்சம் அசந்தா அவ்வளவு தான்.. வலையில் சிக்கிய ஓநாய் மீன்.. மீனவர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த மீனவர் ஒருவர் ராட்சத வோல்ஃப் மீனை (Wolf Fish) பிடித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடல் ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது. உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. இதனை நம்பி உலகின் கணிசமானோர் இருக்கின்றனர். கடலில் இருக்கும் மீன்வளம் பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவருகிறது.
வோல்ஃப் மீன்
இப்படி மீன்களை பிடிக்க ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்த ஜேக்கப் நோல்ஸ். கடலில் மீன்பிடித்து வரும் இவர் சமீபத்தில் தனது வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது ஒரு வோல்ஃப் மீன்.
அட்லாண்டிக் வோல்ஃப் மீனுக்கு அட்லாண்டிக் கெளுத்தி மீன், கடல் கெளுத்தி மீன், டெவில் மீன், ஓநாய் ஈல் எனப் பல்வேறு வகையான பெயர்கள் இருக்கின்றன. பார்ப்பதற்க்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும் இந்த மீனைத்தான் பிடித்திருக்கிறார் ஜேக்கப். முதலில் அவரை கடிக்க முயற்சி செய்கிறது அந்த மீன். ஆனால், ஜேக்கப் சுதாரித்து கெட்டியாக மீனை பிடித்துக்கொள்கிறார். அதன் வாய் திறந்தபடி இருக்க அதற்கு பெரிய இறால் ஒன்றை வழங்குகிறார் அவர். அந்த இறாலை சடக் என்ற சத்தத்துடன் கவ்வி பிடிக்கிறது இந்த ராட்சத மீன்.
விடுவிப்பு
அதனை தொடர்ந்து அந்த மீனை மீண்டும் கடலிலேயே விட்டுவிடுகிறார் ஜேக்கப். இதுகுறித்து அவர் பேசுகையில்,"அது என்னை கடிக்க முயன்றது. ஆம் இந்த வகை மீன்கள் கடிக்கவும் செய்யும். இது மீன் பொறியில் உள்ள அனைத்தையும் கொன்றுவிட்டது. நாங்கள் அவற்றை அடிக்கடி பிடிப்பதில்லை. அவை பாதுகாக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவை" என்றார். இதனை அந்த மீன்பிடி படகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், அரியவகை மீனை மீண்டும் கடலிலேயே விடுவித்த ஜேக்கப்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read | செங்குத்தான பாறைல வெறுங்காலோடு அசால்ட்டாக ஏறிய வயசான துறவி .. ஆடிப்போன மலையேறும் வீரர்கள்..