உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்.. ‘மீண்டும் உயிர் பெறலாம்’ என மூட நம்பிக்கையா.?
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இந்தியாவில் ஒரே வீட்டில் இறந்து கிடந்திருந்த சம்பவம் ஏற்கனவே மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி மேலும் மேலும் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | "அதுங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி"..எல்லா வீட்டுலயும் நல்ல பாம்பு.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?
இந்த தற்கொலையில் உயிரிழந்த அனைவருமே மகாராஷ்டிர மாநிலத்தில் மஹிசால் என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக போகத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர் எனும் சகோதரர்கள் தான் இந்த தற்கொலை செய்த குடும்பத்தின் குடும்பத் தலைவர்கள். இவர்கள் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள்தான் இவர்களுடைய தாயார், மனைவிமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேருடனும் சேர்ந்து தற்கொலை செய்திருக்கின்றனர். இதில் போகத் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறா,ர் இதேபோல் மானிக் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவர்கள் உயிரிழப்புக்காக விஷம் அருந்தியதாக கூறப்படும் நிலையில், இவர்களுடைய தற்கொலைக்குப் பின்னர் இவர்களின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு இவர்களை அனுப்பி வைத்தனர். இதேபோல் இந்த சகோதரர்கள் கடன் சுமையில் இருந்து வந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ஒருபுறம் விசாரணையில் கூறப்பட்டு வந்தாலும், இன்னொருபுறம் உயிரிழந்தவர்களின் வீட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது, இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.
அந்த கடிதத்தில் என்ன விவரங்கள் இருக்கின்றன என்று இன்னும் வெளியாகாத நிலையில், ஆன்மிக தாக்கம் அல்லது மூட நம்பிக்கை காரணமாக இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்களா ? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருவதாக புதிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. கடந்த 2018-ல் டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருந்து 11 பேர் மீண்டும் ஜென்ம மோட்சம் கிடைக்கும் உள்ளிட்ட நம்பிக்கைகளால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்களையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Also Read | கடலில் மூழ்கிய பிரமாண்ட மிதவை ஹோட்டல்.. 50 வருசம் முன்னாடியே இவ்ளோ பணத்த இழைச்சு கட்டிருக்காங்களா?

மற்ற செய்திகள்
