‘சென்னை TO மதுரை 45 நிமிஷத்துல போகலாம்!’.. உண்மையிலேயே இது ‘வேற லெவல்’!.. மிரட்டும் 'ஹைப்பர் லூப்' தொழில்நுட்பம்!!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்அமெரிக்க தொழிலதிபரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகம், ஓட்டுனர் இல்லா கார் என பல ஆராய்ச்சிகளில் வென்றவர். 2013 ஆம் ஆண்டு அதிவேக பயணத்திற்காக 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம் குறித்தும் ஆய்வு செய்து அறிமுகம் செய்தார்.
அதன்படி, மேம்பாலம் அமைத்து அதற்கு மேல் காற்றில்லா பெரிய குழாய் பதிக்கப்படும். அந்த குழாய்க்குள் இருக்கைகளுடன் கூடிய 'டியூப்' மாத்திரை வடிவ உருளை பொருத்தப்பட்டு, அது இயங்க துவங்கியதும் காந்த விசையால் குழாய்க்குள் அந்த உருளை அந்தரத்தில் மிதந்தபடி மணிக்கு 1000 கி.மீ.,ல் பறக்கும். பல நாடுகளில் 'ஹைப்பர் லுாப்' பற்றிய ஆய்வு, பரிசோதனைகள் நடக்கிறது.
இந்தியாவிலும் கூட, மும்பை - புனே 'ஹைப்பர் லூப்' திட்ட ஆரம்ப பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி மாதிரி (புரோட்டோடைப்) ஹைப்பர் லுாப் தயாரிக்கப்படது. மும்பை - புனே (200 கி.மீ.,) பயணிக்க தற்போது 4 மணி நேரம் ஆகும் என்கிற நிலையில், ஹைப்பர் லுாப் வந்தால் 20 நிமிடத்தில் இந்த பயணம் சாத்தியமாகும். இதற்கான மாதிரி ஹைப்பர் லுாப் அமெரிக்காவில் சோதனையில் உள்ளது. மகாராஷ்டிரா அரசு, 'விர்ஜின் ஹைப்பர் லுாப் ஒன்' நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நம்மூருக்கு இந்த ஹைப்பர் லூப் வந்தால் மதுரை டூ சென்னை 45 நிமிடத்தில் செல்லலாம்.
வர்த்தக ரீதியாக ஹைப்பர் லுாப் கொண்டு வர, அமெரிக்காவின் என்.இ.டி.டி., (நான் டிரடிஷனல் அண்ட் எமர்ஜிங் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கவுன்சில்) அனுமதி கொடுக்க வேண்டும். ஏர் குஷன தொழில்நுட்பத்தில் ஹைப்பர் லுாப் தயாரிக்க எலன் மஸ்க் திட்டமிட்டார். ஆனால், இன்று காந்த விசையால் இது தயாரிக்கப்படுகிறது. மூடிய குழாயில் செல்லும் இந்த வாகனமான 'ஹைப்பர் லுாப்' என்றால் திறந்த வெளியில் செல்லும் ரயில். அதாவது இதனை 'ஒப்பன் லுாப்' என்று சொல்லலாம். 1940 முதல் இது குறித்து ஆய்வு நடக்கிறது. தற்போது முழு வடிவம் கிடைத்துள்ளது. நிலம், பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் கிடைத்தால் இது நம் நாட்டில் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.