Udanprape others

என்னையே 'அதுல' இருந்து தூக்கிட்டீங்க இல்ல...! இனி தான் பெரிய 'டிவிஸ்ட்' காத்திருக்கு...! 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கண்ணா...' - மாஸ் காட்டிய டிரம்ப்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Oct 21, 2021 02:25 PM

ட்விட்டர், ஃபேஸ்புக் என பல சமூக வலைத்தளங்களில் இருந்து முடக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனக்கென ஒரு புது சமூக வலைத்தளத்தையே உருவாக்கியுள்ளார்.

Donald Trump created a new own social network truth social

அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் சரிச்சைக்குரிய பல கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

Donald Trump created a new own social network truth social

அதோடு, டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றியடையாததால் தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டும் வகையில் வெறுப்பு கமெண்ட்களை பதிவிட்டார். இதனால், ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டுமான கேப்பிடலில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் இந்த செயலுக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரின் கணக்குகளை டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் முடக்கின.

Donald Trump created a new own social network truth social

டிரம்ப் தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு தன்னுடைய எந்த கருத்துக்களையும் சொல்ல வழியில்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தற்போது டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இன்னும் சில மாதங்களில் தான் சொந்தமாக உருவாக்கிய சமூக வலைத்தளம் மக்கள் பயன்பட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Donald Trump created a new own social network truth social

அதோடு அதன் பெயர் 'ட்ரூத் சோஷியல்' எனவும் நவம்பர் மாதம் மத்தியில் அதன் பீட்டா வர்ஷனை பயன்பாட்டிற்கு கட்டாயம் வரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை சீண்டும் வகையில்  ''ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்பு முனை உருவாகும்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Donald Trump created a new own social network truth social | World News.