'2018ம் ஆண்டில் வருமானம் 427.4 மில்லியன் டாலர்'... 'ட்ரம்ப் ஏன் அப்படி செய்தார்'... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் போய்விடுகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பத்து ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்கள் மூலம் டிரம்ப்புக்கு 427.4 மில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செலுத்தியதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா காலக் கட்டத்தில் டிரம்பின் சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலரிலிருந்து 1 பில்லியன் டாலராக குறைந்துவிட்டதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது.பல ஆண்டுகளாக வரி தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் வழங்க மறுத்துவந்த அதிபர் டிரம்ப், வரி செலுத்த மறுத்து சட்டரீதியாகப் போராடிவந்தார். தன்னுடைய தொழில் நிறுவனங்களில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், அவர் வரிகளைக் குறைக்க முயன்றார் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
