'ஒரே ஒரு மிஸ்டேக்தான்...' 46 மில்லியன் நோட்டுகள் க்ளோஸ்.. ரிசர்வ் வங்கிக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 09, 2019 05:09 PM

ஆஸ்திரேலியாவில் புதிதாக அச்சிடப்பட்ட 50 டாலர் நோட்டுக்களில், எழுத்துப்பிழை இருப்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

Australia prints 400 million banknotes with a typo

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆஸ்திரேலியாவில் சுமார் 11 ஆயிரம் கோடி (2.3 பில்லியன்) மதிப்பில்  4 கோடியே 60 லட்சம் (46 மில்லியன்) எண்ணிக்கையில் மஞ்சள் நிறத்திலான 50 டாலர் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. அதிக அளவு புழக்கத்தில் இருந்து வரும் இந்த நோட்டின் ஒரு பக்கம், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான எடித் கோவானின் முதல் உரை சிறிய எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது.

இதில் பொறுப்புணர்வு என பொருள்படும் ‘responsibility’ என்ற வார்த்தை எழுத்து பிழையுடன் ‘responsibilty’ தட்டச்சு செய்யப்பட்டிருப்பதை நேயர் ஒருவர் ரேடியோவில் தெரிவித்திருந்தார். அந்த ரேடியோ நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 டாலர் நோட்டுகளில் உள்ள எழுத்துப்பிழையை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் 50 டாலர் நோட்டுக்களை ஆஸ்திரேலியாவின் ரிசர்வ வங்கி ஆய்வு செய்தது. பின்னர் அந்நாட்டு ரிசர்வ் வங்கி, 50 டாலர் நோட்டுகளில் எழுத்துப் பிழை இருப்பதை உறுதி செய்தது. இதன்பின்னர் 50 டாலர் நோட்டுக்களில் உள்ள எழுத்துப்பிழை விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய 50 டாலர் நோட்டுக்கள் வெளிவரும் என்று அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : #AUSTRALIA #DOLLARS #POLYMER #RESPONSEBILITY