சொன்னத சிறப்பா செஞ்சிட்டோம்...! 'நாங்க எக்ஸ்போர்ட் பண்ணின போர் கப்பல்களிலேயே, இதான்...' - 'சீனா' வழங்கிய கப்பல் குறித்து வெளிவந்துள்ள 'வியக்க' வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிநவீன வசதிகள் கொண்ட மிகப்பெரிய போா்க் கப்பலை இந்தியாவின் அண்டை நாட்டிற்கு சீனா வழங்கியுள்ளது
பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக சீனா உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனா போட்டுக்கொண்ட கடற்படை ஒப்பந்தத்தில் 054ஏ/பி வகை போா்க் கப்பல்கள் நான்கை சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
அதன்படி, தற்போது சீன அரசுக்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனம் ஒன்று தயார் செய்த 'பிஎன்எஸ் துக்ரில்' என்ற போா்க் கப்பல் ஷாங்காயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், '054ஏ/பி வகை போா்க் கப்பலான இந்தக் கப்பலுக்கு 'பிஎன்எஸ் துக்ரில்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவுக்கான பாகிஸ்தான் தூதா் மொயின் உல் ஹக் இதுகுறித்து கூறும் போது, 'சீனா பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் படி, சீனா தற்போது அளித்துள்ள பிஎன்எஸ் துக்ரில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் பாகிஸ்தானின் கடற்படை பலத்தை உறுதி செய்வதில் எழும் சவால்களை தடுக்கும்.
இது பாகிஸ்தான் கடற்படைக்காக கட்டமைக்கப்பட்டு வரும் நான்கு போா்க் கப்பல்களில் முதலாவதாகும். பிஎன்எஸ் துக்ரில் போர் கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, அதிநவீன திறன்களைக் கொண்டுள்ளது.
அதோடு, சீனா இதுவரை ஏற்றுமதி செய்துள்ள கப்பல்களிலேயே பிஎன்எஸ் துக்ரில் போர் கப்பல் தான் மிகப்பெரிய, மேம்பட்ட போா்க் கப்பலாகும்' என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக் கப்பல்கள் மட்டுமல்லாமல், ஜெ.எஃப் 17 வகை போா் விமானத்தை தயாரிப்பதிலும் பாகிஸ்தானுக்கு சீனா உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.