"DAILY பணம் செலவு பண்றது தான் என் வேலையே.." ஒரு நாளைக்கு 40 லட்சம் POCKET MONEY.. இன்டர்நெட்டை அலற விடும் இளம்பெண்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 04, 2022 04:07 PM

ஒருவரின் வாழ்நாள் கனவு என்பது, தனக்கு பிடித்த வேலையை செய்து, அதில் கிடைக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, தனக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பது தான்.

newyork stay at home daughter spends 40 lakh rupees for a day

Also Read | "நான் கண்ணாடி மாதிரி லே.." கடல் நீரில் தென்பட்ட மீன்.. "அட, இதுல இவ்ளோ ஆச்சரியம் இருக்கா??.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்

இதற்காக, பல நாட்கள் பாடு பட்டு, தங்களுக்கு விருப்பப்படும் விஷயங்களை நிறைவேற்றி, அதில் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தினந்தோறும் செய்து வரும் செயல் ஒன்று, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாம்..

டிக் டாக் மூலம், இணையத்தில் சற்று பிரபலம் ஆனவர் ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam). நியூயார்க் பகுதியைச் சேர்ந்த இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா செலவு செய்து வருகிறார்.

newyork stay at home daughter spends 40 lakh rupees for a day

Stay at home daughter

இது,தொடர்பாக, பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரோமா வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல், தனக்கு "Stay at home daughter" என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தனது முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார். அதே போல, மற்றொரு இன்ஸ்டா வீடியோவில், கண் புருவங்களை அழகுபடுத்த, 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய்) செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரோமா.

newyork stay at home daughter spends 40 lakh rupees for a day

தினமும் எழுந்த பிறகு, உடற்பயிற்சி செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, பார், ரெஸ்டாரண்ட், அழகு நிலையங்கள் செல்வது, உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வாங்குவது என தினமும் பல லட்ச ரூபாயை செலவு செய்து வருகிறார். இதில், பல நாட்கள் அவர் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்.

மேலும், ஒரு நாள் அணிந்த உடையை மறுமுறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத ரோமா, தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. தனக்கான ஆடம்பர செலவு ஒரு பக்கம் இருக்க, மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் நன்கொடை செய்தும் வருகிறார்.

newyork stay at home daughter spends 40 lakh rupees for a day

இப்படி ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதையே வேலையாக கொண்டுள்ள இளம் பெண் குறித்து, நெட்டிசன்கள் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "இப்படி யாராவது போன் பண்ணா அதை நம்பிடாதீங்க".. புதுசாக வலை விரிக்கும் கும்பல்.. சென்னை கமிஷனர் எச்சரிக்கை..!

Tags : #NEWYORK #STAY AT HOME #NEWYORK STAY AT HOME #DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Newyork stay at home daughter spends 40 lakh rupees for a day | World News.