'ஆஸ்ட்ரோஜெனகாவின் 4 கோடி தடுப்பூசி ரெடி.. அதுமட்டுமில்ல..!'... பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இந்தியா நிறுவனம் ஏற்கனவே 4 கோடி தடுப்பூசிகளை தயாரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் இன்னும் குறையாத நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெகுவாக குறைந்துள்ளது. எனினும் எப்போது வேண்டுமானாலும் அதன் அடுத்த அலை உருவாகலாம் என்பதாலும், இந்த நோயை முற்றிலுமாக விரட்டுவதற்காகவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் பணியில் இந்தியாவின் சீரம் நிறுவனம் இறங்கியது.
இந்நிலையில், ஆஸ்ட்ரோஜெனகாவின் 4 கோடி தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும், இதே போல் இன்னொரு நிறுவனமான நோவாவேக்சின் தடுப்பூசியை விரைவில் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 2 தடுப்பூசிகளும் இறுதி கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம். ஆஸ்ட்ரோஜெனகாவின் 4 கோடி தடுப்பூசிகளும் இந்தியாவின் பயன்பாட்டுக்காக என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
