'புதுசா புதுசா உருமாறி... அலறவிடும் கொரோனா'!.. 'எந்த டிசைன்ல வந்தாலும்... விரட்டி அடிக்க 'புதிய தடுப்பூசி' கண்டுபிடிப்பு'!... WILD CARD-ல உள்ள வந்து மாஸ் பண்ணிட்டாங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை போன்றே பிரபலமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் புதிதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் விரைவில் மருத்துவ பரிசோதனையை எதிர்கொள்ளும் 'கோவிஷீல்டு' நம்பகரமான ஒன்றாக அமைந்துள்ளது.
இது கொரோனா வைரசை தடுத்து நிறுத்தும் நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குவதுடன், டி செல்களையும் உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு அம்சம் என்று விஞ்ஞான உலகம் சொல்கிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை போன்றே பிரபலமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் புதிதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளது.
இந்த தடுப்பூசிக்கு 'டியோஸ்-கோவேக்ஸ் 2' என பெயரிப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் சிறப்புத்தன்மை, கோவிட்-19 மட்டுமின்றி எல்லாவிதமான கொரோனா வைரசையும் தடுத்து நிறுத்தும். மேலும், வவ்வால்கள் உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸ்களையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
இன்னுமொரு சிறப்பு, பொதுவாக தடுப்பூசி என்றால் ஊசி வழியாக உடலில் செலுத்தப்படும். இந்த தடுப்பூசியை ஊசியில்லாமல், வலி இல்லாமல் 'ஸ்பிரிங்' சக்தி கொண்டு உடலுக்குள் செலுத்த முடியும் என்பதுதான்.