'ஹனிமூனுக்கு பணம் வேணும்!'.. இளம் பெண் செய்த மிரட்டல் காரியம்.. விஷயம் தெரிந்ததும் ஷாக் ஆன போலீஸார்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 21, 2020 04:08 PM

இந்த மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த பெண் ஒருவர் தேனிலவு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோசமான செயல் காரணமாக சிறைக்கு செல்லவிருக்கிறார்.

Bride about to sold cocaine to meet her honeymoon

Warrington-ஐ சேர்ந்த 28 வயது பெண்ணான Terrie Renwick என்பவரது வீட்டை போலீசார் சோதனை செய்தபோது அவர் கழிவறைக்குள் கைவிட்டு கொண்டிருந்ததை ஒரு போலீசார் கவனித்திருக்கிறார். அந்த போலீஸார் ஒரு பிளம்பராக பணியாற்றியவர் என்பதால் கழிப்பறையில் இருந்து வெளிவரக்கூடிய குழாயை அவர் பரிசோதித்துள்ளார்.

Bride about to sold cocaine to meet her honeymoon

அப்போதுதான் அந்த குழாய்க்குள் 220 பொட்டலங்களில் ஹெராயின் மற்றும் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததை அடுத்து  Terrie Renwick  போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Bride about to sold cocaine to meet her honeymoon

இது குறித்து Terrie Renwick பேசியபோது இந்த மாதம் திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு செல்வதற்கான கனவில் இருந்த அவர் அதற்கான பணத்திற்காக இந்த போதை பொருட்களை விற்பதற்கு திட்டமிட்டிருந்தார் என்று  குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride about to sold cocaine to meet her honeymoon | World News.