VIDEO : 4 பந்துகளில் 4 'விக்கெட்'... அதுவும் எல்லாமே 'க்ளீன்' போல்டு தான்... 'திசை' தெரியாமல் பறந்த 'ஸ்டம்ப்'புகள்,,.. வேற லெவலில் தெறிக்க விட்ட 'பவுலர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Sep 21, 2020 02:57 PM

இங்கிலாந்தில் தற்போது வைட்டாலிட்டி ப்ளாஸ்ட் டி20 (Vitality Blast T20) தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹாம்ப்ஷயர் (hampshire) மற்றும் மிடில்செக்ஸ் (Middlesex) அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.

shaheen afridi takes 4 wickets in 4 balls and video gone viral

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மிடில்செக்ஸ் அணி, இறுதியில் வெற்றி பெறும் கட்டத்தில் இருந்த நிலையில், 18 ஆவது ஓவரில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரை வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி (Shaheen Afridi), தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், மிடில்செக்ஸ் அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ப்ஷயர் அணி வெற்றி பெற்றது.

சகீன் அஃப்ரிடி நான்கு பந்துகளிலும் க்ளீன் போல்டு எடுத்ததன் மூலம் தான் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தமாக, சகீன் அப்ரிடி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹாம்ப்ஷயர் அணிக்காக வீசப்பட்ட சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shaheen afridi takes 4 wickets in 4 balls and video gone viral | Sports News.