இடது கையில 'L' வலது கையில 'R'...! 'வேற வழியில்ல, இந்த டாட்டூ தான் எனக்கு சரி வரும்...' - டாட்டூவிற்கு பின் இருக்கும் கதை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 04, 2021 10:53 PM

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வலது இடது என்ற பக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ள தனது கைகளில் பச்சை குத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Australia woman tattoo on hand remember right and left side

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டி'கோடியா லெய்ன் என்ற 23 வயது பெண்ணுக்கு எப்போதும் வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் எது என குறிப்பிடுவதில், பல சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், அவர் தனது அணிக்கு நேவிகேட்டராக தேர்வு செய்யப்பட் போது பல சமயங்களில் தவறான திருப்பங்களை எடுக்குமாறு டிரைவருக்கு கூறியுள்ளார். அதனால் பல அவமானங்களை சந்தித்தும் வந்துள்ளார். இந்த பிரச்சனையை சமாளிக்க வேறு வழியில்லாமல், இடது கையில் 'L' மற்றும் வலது கையில் 'R' எனவும் பச்சை குத்தியுள்ளார்.

அவரின் அந்த டாட்டூ போட்டோவை இணையத்தில் பதிவு செய்த வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஆயிரக்கணக்கான ஷேர்களையும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australia woman tattoo on hand remember right and left side | World News.