'ஆடு மாடெல்லாம் அடிக்கடி காணாம போகுதே...!' தடுக்க என்ன பண்ணலாம்...? விவசாயி போட்ட மாஸ்டர் ப்ளான்... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் வளர்க்கும் செல்ல பிராணி வழி தவறி சென்று விடாமலும்,யாரும் திருட முயற்சி செய்வதை தடுக்கும் விதமாக விவசாயி ஒருவர் செய்த செயல் அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரை சேர்ந்தவர் கும்பையா. இவர் கால்நடை பண்ணை நடத்தி விலங்குகளை வளர்த்தும், பராமரித்தும் வருகிறார்.
சமீபகாலமாக தன்னுடைய கால்நடைப் பண்ணையில் ஆடு, மாடுகள் போன்ற பிராணிகள் திடீரென காணாமல் போகும் சம்பவம் நடைபெற்றுவருகிறது. ஒரு சில நேரங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது பாதை மாறி போகும் சம்பவங்களும் நடந்துள்ளது.
இதனால் கவலை அடைந்த கும்பையா தான் வளர்க்கும் ஜீவனுக்கு எந்த விட அசம்பாவிதம் நடக்க கூடாது என நினைத்து ஒரு திட்டம் தீட்டினார்.
திடிரென அவருக்கு வந்த யோசனையால், தன் காளை மாட்டின் வயிற்றுப் பகுதியில் அவருடைய செல்ஃபோன் எண்ணான 10 இலக்க எண்ணை அழுத்தமாக பச்சைக்குத்தி விட்டுள்ளார். இனி மாடு வழி தெரியாமல் எங்காவது போனாலோ அல்லது யாராவது திருடி சென்றாலோ அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
