'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'எல்லாரும் புருடா விடுறாங்க'... 'வீராப்பா சுற்றிய இளைஞர்'... இறுதியில் நடந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா என்று ஒன்று இல்லை, கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக் கூறி சுற்றிய இளைஞருக்கு நடந்த துயரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உலகையே ஒரு ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுவரை நமது பாதுகாப்பு என்பது நம் கையில் மட்டுமே உள்ளது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முககவசம் அணிவது மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி. நான் மாஸ்க் அணியமாட்டேன் எனக் கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூட தற்போது மாஸ்க் அணியத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை குருட்டுத்தனமாகப் பின்பற்றி மாஸ்க் அணியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் என்ற இளைஞர் தீவிரமான டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரனான இவர், சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று கூறி பதிவுகளைப் போட்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார். இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி ரிச்சர்டு ரோஸிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரிச்சர்டுக்கு , இறுதியில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டிரம்பை தீவிரமாகப் பின்பற்றி வந்த ரிச்சர்டு, ஜூலை 4ஆம் தேதி பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார் மாஸ்க் போடமாட்டேன் எனக் கெத்தாகச் சுற்றிய நபர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது, எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

மற்ற செய்திகள்
