'நல்ல' செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்... அதோட 'இந்த' விஷயத்திலயும் 'இந்தியா' தான் கெத்தாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jul 12, 2020 09:49 PM

உலகம் முழுவதையும் தாக்கி இருக்கும் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஆனாலும் மற்ற நாடுகளில் இல்லாத சிறப்பாக நமது நாட்டில் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Corona recovery rate stands at 63%, mortality rate is just 2.72%

அதேபோல கொரோனா இறப்பு விகிதமும் குறைந்திருப்பதாக மத்திய அரசு நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கும் முக்கிய தகவல்களை கீழே காணலாம்.

* இந்தியாவில் ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இறப்புவிகிதம் 2.82 சதவீதமாக இருந்தது. இப்போது அது 2.72 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

* கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற இறப்பின் தேசிய சராசரி 2.72 சதவீதம் ஆகும். உலகின் பல நாடுகளை விட இது மிக குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த தேசிய இறப்பு விகிதத்தை விட 30 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இறப்புவிகிதம் குறைவாக இருக்கிறது. இதன்படி கேரளாவில் 0.41, ஜார்கண்டில் 0.71, பீகாரில் 0.82, தெலுங்கானாவில் 1.07, தமிழகத்தில் 1.39, அரியானாவில் 1.48, ராஜஸ்தானி 2.18, பஞ்சாப்பில் 2.56, உத்தரபிரதேசத்தில் 2.66 சதவீதமாக உள்ளது.

மணிப்பூர், நாகலாந்து, தத்ரா நகர்ஹவேலி, டாமன் தியு, மிசோரம், அந்தமான் நிகோபார், சிக்கிம் ஆகியவற்றில் கொரோனாவில் ஒருவர்கூட பலி இல்லை.

* இந்தியாவில் தொடர்ந்து இறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதற்கு, மத்திய அரசின் ஆதரவு, வழிகாட்டுதலுடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்து வருகிற நடவடிக்கைகளே காரணம். குறிப்பாக வயதானவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட நோயுடன் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஆகியோர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதும் இறப்புவிகிதம் குறைவதற்கு காரணம் ஆகும். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பில் தரம் பராமரிக்கப்படுகிறது.

* கொரோனாவில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் தேசிய சராசரி 62.42 சதவீதம் ஆகும். ஆனால் 18 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதை விட அதிகளவில் குணம் அடைவோர் விகிதத்தை கொண்டுள்ளன. அந்த வகையில் இது மேற்கு வங்காளத்தில் 64.94, உத்தரபிரதேசத்தில் 65.28, ஒடிசாவில் 66.13, ஜார்கண்டில் 68.02, பஞ்சாப்பில் 69.26, பீகார் 70.40, குஜராத்தில் 70.72, மத்திய பிரதேசத்தில் 74.85, அரியானாவில் 74.91, ராஜஸ்தானில் 75.65, டெல்லியில் 76.81 சதவீதமாக உள்ளது.

* தற்போது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 682 ஆகும். அவர்கள் அனைவரும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, பரிசோதனைகளை தீவிரப்படுத்தி இருப்பதும், தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை சீக்கிரமாக அடையாளம் காண்பதும், லேசான, முன் அறிகுறியுள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதும், தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை அளிப்பதும், ஆஸ்பத்திரி கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் காரணம் ஆகும்.

* நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கென 1,218 அர்ப்பணிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2,705 சுகாதார மையங்களும், 10 ஆயிரத்து 301 கொரோனா பராமரிப்பு மையங்களும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Corona recovery rate stands at 63%, mortality rate is just 2.72% | India News.