'திருமணம் முடிந்த சந்தோஷத்தில் தேனிலவு போன தம்பதி'... 'என் நிலைமை யாருக்கும் வர கூடாது'... வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போன் கால்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 09, 2021 04:12 PM

திருமணம் முடிந்து கணவருடன் தேனிலவு சென்ற பெண்ணுக்கு வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

கிழக்கு லண்டனைச் சேர்ந்தவர் சார்லோட் டுடுனி டக்கர். 27 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்ற போது அங்கு கேமிரான் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

இதையடுத்து கடந்தாண்டு டெக்ஸாஸில் சார்லோட் - கேமிரான் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் தம்பதியால் உடனே  லண்டனுக்குத் திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்து நியூ இங்கிலாந்துக்குச் சென்றார்கள்.

மகிழ்ச்சியாக இருவரும் பொழுதைக் கழித்த நிலையில், அங்கு ஒரு நாள் சார்லோட் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது மார்பில் ஏதோ கட்டி போல இருந்துள்ளது. அழுத்திப் பார்த்தால் சற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன சார்லோட் மருத்துவரை அணுகியுள்ளார்.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில், அந்த பரிசோதனைகளைச் செய்து விட்டு முடிவுக்காகக் காத்திருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் கழித்து சார்லோட்டின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தன. ஆனால் அந்த முடிவுகள் சார்லோட்யின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

பரிசோதனை அறிக்கையில் சார்லோட்க்கு stage 2 invasive ductal carcinoma மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதைக் கேட்டு அவர் கணவருடன் மனம் நொறுங்கிப் போனார்.பின்னர் அவர்கள் லண்டனுக்குத் திரும்பிய நிலையில் சார்லோட்டுக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஆப்ரேஷன் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக சார்லோட் தனது சிகிச்சை நாட்கள் முழுவதையும் தனியாகவே கழித்துள்ளார்.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

இதுகுறித்து பேசிய சார்லோட், நான் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். நான் அனைத்து பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான், ஏதாவது உடலில் மாற்றம் மற்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே தாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

A newlywed who discovered her breast cancer while on honeymoon

ஏனெனில் அவர்கள் கண்டறியப்படாத புற்றுநோயுடனே வாழ வாய்ப்பு உள்ளது, அதனால் பரிசோதனை என்பது முக்கியம். நான் சந்தித்த கொடுமையை யாரும் சந்திக்கக் கூடாது'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A newlywed who discovered her breast cancer while on honeymoon | World News.