'மடக்கு மடக்குன்னு குடிக்கும் போது கூடவா டேஸ்ட் தெரியல'?... 'கோடீஸ்வரர் சொன்ன பதில்'... தப்பி பிழைத்த கடைக்காரர்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க் நகரில் உள்ள பிரபல உணவகத்திற்கு 4 பெரும் பணக்காரர்கள் சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் 2000 டாலர் மதிப்புள்ள ஒயினை ஆர்டர் செய்துள்ளார்கள். அது இந்திய மதிப்பில் சுமார் 1லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும். அதே நேரத்தில் அங்கு வந்த இளம் தம்பதியர் 18 டாலர் மதிப்புடைய ஒயினை ஆர்டர் செய்துள்ளார்கள்.

அப்போது சிறிதாக நடந்த குளறுபடி காரணமாக 2000 டாலர் மதிப்புள்ள ஒயினை ஆர்டர் செய்த நான்கு பெரும் பணக்காரர்களுக்கு 18டாலர் மதிப்புள்ள பாட்டிலையும், 18 டாலர் மதிப்புள்ள விலை குறைந்த ஒயினை ஆர்டர் செய்த ஒரு இளம் தம்பதிக்கு 2 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஒயினும் மாற்றி வழங்கப்பட்டன.
பணியில் இருந்தவர் கவனக்குறைவாக இரு ஒயின்களையும் ஒரே மாதிரியான டிகாண்டர்களில் ஊற்றியது தான் இந்த குளறுபடிக்குக் காரணம் எனத் தெரியவந்தது. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விலை குறைவான மதுவை அருந்திய 4 பெரும் பணக்காரர்களும், ''இந்த மதுவின் சுவை மெய்சிலிர்க்க வைக்கிறது'' என விலை குறைந்த மதுவை தாங்கள் ஆர்டர் செய்து வாங்கிய விலை உயர்ந்த மதுவென நினைத்துப் பாராட்டியபடி அருந்தினார்கள்.
அதே நேரத்தில் தவறுதலாக வந்த விலையுயர்ந்த மதுவை அருந்த ஆரம்பித்ததும் அது தாங்கள் ஆர்டர் செய்தது இது இல்லை என்பதை அந்த தம்பதியர் உணர்ந்து கொண்டார்கள். அதே நேரத்தில் நடந்த தவறை நாங்கள் அந்த 4 பேரிடமும் கூறியிருந்தால் நிச்சயம் பெரும் பிரச்சனை வந்திருக்கும் என, அந்த உணவக உரிமையாளர் கீத் மெக்னலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
