'அந்த பிளாஸ்டிக் கவரை கொஞ்சம் கிழிங்க'... 'அட பாவிகளா இதையா கடத்தி வந்தீங்க'... வெலவெலத்து போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய ரசாயனத்தால் பல இளைஞர்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்றே சொல்லலாம்.

கனடா நாட்டு எல்லைப் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெரிய பார்சலில் பத்திரமாக பேக்கிங் செய்யப்பட்டு சில பார்சல்கள் இருந்தது. வீட்டு உபயோகப் பொருட்களின் நடுவே இருந்த அந்த பார்சலை பார்த்த அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பார்சலை பிரித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அதில் 1,500 கிலோ கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட ரசாயனம் ஒன்று சிக்கியுள்ளது. Fentanyl என்னும் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படும் அந்த ரசாயனம், கிரிமினல்கள் கையில் சிக்கியிருந்தால் 2 பில்லியன் டோஸ் போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்திருக்கும்.
கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை சோதனையிட்டுவந்த அதிகாரிகளின் கண்களில் இந்த ரசாயனம் சிக்கியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை அதிகாரிகள் அலட்சியமாக இருந்திருந்தால் அந்த போதைப்பொருள் கனடாவின் தெருக்களுக்குள் நுழைந்து ஏராளமான இளைஞர்களின் வாழ்வை அது சீரழித்திருக்கும் நிலையில், பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
