Anantham

“இனி எந்த திசையில் செல்லும்னு தெரியாது”.. ஊழியர்களிடம் TWITTER CEO சொன்ன பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Apr 26, 2022 04:15 PM

டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் உறுதியற்றது அதன் சிஇஓ ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

Twitter in dark over future under Elon Musk, CEO tells Staff

Also Read | “அய்யோ இது பூனைக்குட்டி இல்ல”.. தேயிலை செடிகளுக்கு இடையே கேட்ட சத்தம்.. நீலகிரி அருகே அதிர்ச்சி..!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 3 லட்சத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. முதலில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அவர் வாங்கினார். இதன்பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முயற்சி மேற்கொண்டார். இந்த சூழலில் அந்த நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பெரும் விலை கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘நிர்வாகம் முழுமையாகக் கைமாற 6 மாதங்கள் வரை ஆகலாம். இப்போது வரை யாரும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை. நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது. இனி டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது’ என பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 Twitter in dark over future under Elon Musk, CEO tells Staff

டுவிட்டர் நிர்வாகம் கைமாறும் வரை பராக் அகர்வாலே தலைமைச் செயல் அதிகாரியாக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதற்கு முன்னதாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், நிறுவன விதிகளின்படி அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என ஈக்விலார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #ELON MUSK #TWITTER CEO #PARAG AGRAWAL #TWITTER CEO PARAG AGRAWAL #EMPLOYEES COMPANY #எலான் மஸ்க் #டுவிட்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Twitter in dark over future under Elon Musk, CEO tells Staff | Technology News.