திடீரென வைரலாகும் ELON MUSK 5 வருச பழைய ட்வீட்.. அப்படியென்ன சொல்லி இருக்கார்..?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரின் விலை என்ன என்று கேட்ட எலான் மஸ்க்கின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா என்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறார். இந்த சூழலில் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எலான் மஸ்க்கின் பழைய ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் ட்விட்டரை மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அதற்கு டேவ் ஸ்மித் என்பவர் ‘நீங்கள் அதை வாங்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ‘ட்விட்டர் என்ன விலை?’ என கேள்வி எழுப்பியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த ட்விட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாக கேட்ட எலான் மஸ்க், தற்போது ட்விட்டரை சொந்தமாக வாங்கியுள்ளார். இனி ட்விட்டர் பங்குச்சந்தை நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டு தனிநபர் நிறுவனமாக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல துறைகளில் கால்தடம் பதித்து வரும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரையும் தன்வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
This exchange continues to haunt me pic.twitter.com/W06oSqx0MR
— Dave Smith (@redletterdave) April 25, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
