VIDEO: "மோர்ல மயக்க மருந்து கொடுத்தோமா.? 😅.. இந்த QUESTION-க்கு பதில் சொலறதே இல்ல" - 'வீரப்பன்' வழக்கு அதிரப்படை விஜயகுமார் IPS
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா என நான்கு மாநில எல்லைகளிலும் தேடப்பட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் எத்தனையோ பல போலிஸ் ஆபரேஷன்களுக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.
Also Read | தனக்கு தானே கொரோனா வர வைத்த பிரபல பாடகி?.. எதுக்காக தெரியுமா?.. பீதியை உண்டு பண்ணிய தகவல்!!
இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த K.விஜயகுமார் ஐபிஎஸ் அப்போதைய தனிப்படை தலைவராக இருந்து பொறுப்பேற்று, இதை சாத்தியப்படுத்தினார். இறுதியில் அதிரடிப்படைக்குச் சொந்தமான டெம்போ டிராவலர் முற்றிலும் ஆம்புலன்ஸாக ஆக மாற்றப்பட்டு, ஒரு ரகசிய நபர் மூலமாக விஜயகுமார் , மற்றும் அதிரடிப்படையினர் திட்டமிட்டு, அனைவரையும் கூண்டுடன் பிடித்து, ஆனாலும் சரணடைய மறுத்து அவர்கள் சுட முயற்சிக்க, மீண்டும் அதிரடிப்படையினர் சுட்டனர். அதன் பிறகே சுமார் 15, 20 வருட வழக்கு முடிவுக்கு வந்தது.
மேலும் தமது அனுபவம் குறித்து, “Veerappan: Chasing The Brigand” எனும் புத்தகத்தையும் K.விஜயகுமார் எழுதியுள்ளார்.
இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்த விஜயகுமார் ஐபிஎஸ், “வீரப்பனை பிடிக்க எத்தனையோ டெக்னிக்-களை நாங்கள் கையாண்டோம். கையாளவும் யோசித்தோம். இதே போல் அதற்கு முன்பாகவும் பல டெக்னிக்கள் வீரப்பனை பிடிப்பதற்கு பேசப்பட்டு தான் வந்தது. அவற்றில் பல வேடிக்கையாகவும் இருந்தது. எனக்கு என்னவென்றால், இவ்ளோ கஷ்டப்பட்டு செய்கிறோம், மோரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டார்கள் என்பது போன்ற பேச்சுகள் வருகிறது. இந்த மாதிரியான கேள்விக்கு நான் பதில் சொல்வதை புறக்கணித்து விட்டேன்.
வீரப்பனுக்கு உப்புமாவில் மயக்க மருந்து கலந்து கொடுப்பதற்கு ஒரு பெண் சம்மதித்தார். அதாவது எங்களுக்கு ஒத்துழைப்பு தர சம்மதித்தார். ஆனாலும் இதுபோன்ற பல பேச்சுகளையும் முயற்சிகளையும் நாங்கள் டிஸ்கஷன் அளவிலேயே வைத்திருந்தோம். எதையும் செயல்படுத்தவில்லை. இதற்கு முன்பாக எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் என் ஆப்ரேஷனில் அனைத்தும் கிளீனாக இருக்க வேண்டும். இது போன்ற முயற்சிகள் சாத்தியமில்லை என்றால், அவை எதுவும் வேண்டாம் என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.
ஏனென்றால் மயக்க மருந்து வரை போனாலே, மற்றது முடியாதது என்ன இருக்கு? சவாலே அவரை நெருங்குவதில்தான்.” என்று பேசியுள்ளார்.
Also Read | "அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!