'வாங்க மோடி வணக்கங்க மோடி'... பிரதமரை வரவேற்று பாஜக வெளியிட்டுள்ள பாடல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 25, 2021 11:38 AM

கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று தமிழக பாஜகவினர் 'வாங்க மோடி வணக்கங்க மோடி'  என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

Vanga modi vanakam modi 3 minute election campaign song released

கோவை கொடிசியா அரங்கில் இன்று (பிப். 25) அரசு நிகழ்ச்சியிலும், கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையடுத்து, கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக கொங்கு பாஷையில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் கலை இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு 'ஆர்கெஸ்ட்ரா' சண்முகம் இணைந்து பாடல் வரிகளைத் தயாரித்துள்ளனர். ''வாங்க மோடி வணக்கங்க மோடி.. கொங்கு மக்கள் வரவேற்போம் கோடி.. நீங்கத் தந்த திட்டங்கள் கோடி..’’ என்ற மூன்று நிமிட பாடலை தயாரித்துள்ளனர்.

இதில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்ற முதல் வரியை எல்.முருகன், சி.டி.ரவி, சி.பி. ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, முருகானந்தம் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். சில வரிகளைப் பாடகர்களுடன் இணைந்து வானதியும் பாடியுள்ளார். இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vanga modi vanakam modi 3 minute election campaign song released | Tamil Nadu News.