'உங்க வீட்டுல ஏசி இருக்கா'?... 'இந்த 10ம் இருந்தா குடும்ப அட்டையில இது கிடைக்காது'... அதிரடி முடிவு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 18, 2019 11:14 AM

ஏசி உள்ளிட்ட, அரசு வெளியிட்டுள்ள 10 அம்சங்களில் ஏதேனும் ஒன்று இருந்தலும் முன்னுரிமை குடும்ப அட்டைக்கான சலுகை பறிக்கப்பட இருக்கிறது.

TN Government conduct ration card inspection in all over tamilnadu

தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன. மேலும் வசதியானவர்கள் மானியதில் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை உபயோகிப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு நடந்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வருமான வரிச் செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம், தொழில் வரிச் செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியை கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம்,

4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம் ஆகியோர்கள் இதற்கு முன்பு இந்த சலுகைகளை பெற்று வந்தால் அது இனிமேல் நிறுத்தப்படும்.

தமிழக அரசு வகுத்துள்ள விதிகளின் படி மேற்கூறிய 10-ல் ஏதாவது ஒன்று இருந்தால் கூட, அந்த குடும்பங்கள் இனிமேல் மானியங்களை பெறும் தகுதியை இழந்து விடும். இந்த கணக்கில் வரும் குடும்பங்கள் தற்போது முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தி வந்தால் அது மாற்றப்படும்.

Tags : #TN GOVERNMENT #RATION CARD