என்னது கோவிலுக்கு போனா பொங்கல் கிடைக்குமா? .. வைரலாகும் குழந்தையின் கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுட்டி குழந்தை ஒன்றின் மழலை மொழி வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | மகனுடைய பள்ளிக்கூட பையை பொக்கிஷம் போல சுமந்து செல்லும் தந்தை .. வைரல் வீடியோ..!
சுட்டி குழந்தை
சமூக வலை தளங்களில் இப்போது சுட்டி குழந்தைகளின் சேட்டைகள் நிரம்பிய வீடியோக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன. குழந்தைகளின் கியூட் ரியாக்ஷன்கள், சின்ன சின்ன சேட்டைகள் என புதுப்புது வீடியோக்கள் சோசியல் மீடியாவில் நாள்தோறும் வெளியிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது குழந்தையுடன் கோவிலுக்குச் சென்று பொங்கல் சாப்பிடும் எக்ஸ்பிரிமெண்ட் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
பொங்கல் சாப்பிடலாமா?
இந்த வீடியோவில் என்னது கோவிலுக்கு போனா பொங்கல் கிடைக்குமா? என தங்களது டிரேட் மார்க் வசனத்துடன் அட்டகாசத்தை ஆரம்பிக்கிறார்கள் அந்த இளைஞரும் அவரது தோளில் உள்ள சுட்டி குழந்தையும். அவர் சொல்லச் சொல்ல குழந்தைகளுக்கே உரிய மழலை மொழியில் அந்த சுட்டி குழந்தை பேசுவது பலரையும் புன்னகைக்க வைக்கிறது.
கோவிலுக்கு போனா பொங்கல் கிடைக்குமா என்பதில் துவங்கி "டேய் பொங்கலை குடுடா" என சொல்லிவிட்டு வெட்கத்துடன் அந்த குழந்தை சிரிக்கும் காட்சி என வீடியோ நெடுகிலும் அந்த குழந்தை செய்யும் கியூட் ரியாக்ஷன்கள் பலரையும் ஈர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இறுதியில் எக்ஸ்பிரிமெண்ட் சக்சஸ் என அந்த குழந்தை வெற்றிக் குறி காண்பிப்பது உண்மையிலே பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் கோவிலுக்கு போனா பொங்கல் கிடைக்குமா எக்ஸ்பெரிமெண்ட் வீடியோ உண்மையிலேயே சக்ஸஸ் தான். அதிலும் அந்த குழந்தையின் கியூட் வசனங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை அள்ளி வீசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
