“புதிதாக வீடு கட்டப்போகிறீர்களா”?... இதோ வந்துவிட்டது புதிய விதிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 03, 2019 07:07 PM
தமிழ்நாட்டில் இனி புதிதாக கட்டடம் கட்ட சில புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற முகலிவாக்கம் கட்டிட விபத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்த விபத்து அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இனி தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் தமிழக அரசின் பதிவு பெற்ற பொறியாளரிடம் சான்று பெற்ற பிறகே விட்டிற்கு குடிபெயர முடியும்.
இதையடுத்து, வீட்டிற்கான திட்டம், வடிவமைப்பு, கண்காணிப்பு, தர கட்டுப்பாடு, திட்ட அனுமதி போன்றவை தனது மேற்பார்வையின் கீழ்தான் நடைபெற்றது என்று தமிழக அரசு பதிவுபெற்ற இஞ்சினியர் ஒருவர் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
இந்நிலையில், இப்படி அனைத்து அனுமதிகளையும் பெற்று கட்டப்பட்ட வீடு ஒன்றில் விரிசல் ஏற்பட்டாலோ அல்லது இடிந்து விழுந்தாலோ அந்த வீடு கட்டப்பட்ட போது மேற்பார்வை செய்த இஞ்சினியர்தான் பொறுப்பேற்க வேண்டும். இதனையடுத்து, அந்த இஞ்சினியரின் உரிமம் பரிக்கப்படும். மேலும், மிகப் பெரிய இழப்பு என்றால் சிறைக்கு கூட செல்ல நேரிடலாம்.
இதுபோன்ற சட்டங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கெனவே இருந்து வருகிறது. தற்போது இந்த விதிகளை தமிழக அரசும் கொண்டு வந்துள்ளது.
