'குவார்ட்டர் விலை ரூ.20 உயர்கிறது...' 'சாதாரண மதுவிற்கு தனி ரேட்...' டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை ஒட்டி மதுபானங்கள் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது

டாஸ்மாக் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு பதினைந்து சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி(குவார்ட்டர்) மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் நாளை (07.05.2020) முதல் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
