அண்ணே... இங்க சாராயம் எந்த ஏரியால ஓடுது...? 'சின்ன பசங்களா இருக்கீங்க, அது தப்புப்பா...' அட்வைஸ் கேட்டு டென்ஷனாகி...' குலைநடுங்க செய்யும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக சாராயம் வாங்க வந்த சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய நபரை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை கலகத்தில் ஆழ்த்தியுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர எந்த கடைகளும், தொழில்துறை நிறுவனங்களும், மதுபானக்கடைகளும் கூட திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தலைத் தூக்க தொடங்கியது. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் சமூக விரோத செயல்கள் கட்டுக்குள் உள்ளன. ஆனால் மதுபிரியர்களின் கதை தான் திண்டாட்டம். ஏதாவது பிளாக்கில் மது விற்கிறார்களா என தேடி தேடி அலைக்கின்றனர் சில குடிமகன்கள்.
அந்த வகையில் கடந்த 5 ஆம் தேதி, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் 6 சிறுவர்கள் எங்காவது மது கிடைக்குமா என அலைந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருக்கும் சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை செய்யும் வீரா என்பவரிடம் இந்த சந்தையில் மது கிடைக்குமா என விசாரித்துள்ளனர்.
அந்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாக இருப்பதால் குடி பழக்கம் நம் வாழ்க்கையை அழித்துவிடும் என்றெல்லாம் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஏற்கனவே மது கிடைக்காததால் விரக்தியில் இருந்த அந்த சிறுவர்கள் இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து வீராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வீரா இரத்த வெள்ளத்தில் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பித்து சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். ஆனால் அவரால் நடக்க முடியாததால், அங்கிருக்கும் மாரியம்மன் கோவில் அருகே சரிந்து விழுந்து சிறிது நேரத்தில் இறந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வீராவை தாக்கிய கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி ஆயுதங்களால் தாக்குவது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைப்பதாகவும், மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.