'போனவாரம் சுக்குக்காபி, இந்த வாரம் என்ன தெரியுமா...?' 'அடப்பாவிங்களா இது தெரியாம 15 பாட்டில் வாங்கிட்டேனே...' கதறும் குடிமகன்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 10, 2020 01:06 PM

திருச்சியில் காலி சரக்கு பாட்டில்களில் நிலவேம்பு கசாயம் ஊற்றி குடிமகன்களின் நலனுக்காக ரூ.500 க்கு விற்று வருகின்றனர் சில நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள். ஆனால் இது குடிமகன்களை கடும் கோவத்திற்கு உள்ளாகியுள்ளது.

Liquor lovers buy what is sold as a quagmire brandy bottle

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தன்னுடைய அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளது. மேலும் 144 தடை சட்டம் பின்பற்றப்பட்டு வரும் இந்த சூழலில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஒரு சில குடிமகன்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மதுபான கடைகளையும் முடியாது அவர்களுக்கு கவலை அளித்தாலும், அவர்களின் குடும்பங்கள் சந்தோஷத்தில் இருக்கின்றன.

கடந்த வாரங்களில் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்றுவந்ததாக செய்தி பரவியது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் மதுபான கடைகளை ஓட்டை போட்டு சரக்கு பாட்டில்களை திருடி வழக்கில் சிக்குகின்றனர். 

இந்நிலையில் குடிமகன்களின் இந்த தவிப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த ஒரு சிலர், காலியான மதுபாட்டிலில் நிலவேம்பு கசாயம் ஊற்றி விற்று வந்துள்ளனர். 

திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில்  இரவு நேரங்களில் மது விற்கப்படுவதாக தகவல் பரவியது. இதை அறிந்த குடிமகன்கள் ஒரே கூட்டமாக குவித்துள்ளனர்.  திருட்டு மதுபாட்டில் விற்பவர்களில் சிலர், அந்த இருட்டிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் குடிமகன்களை வரிசையில் இடைவெளி விட்டு நிக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு சரக்கு வாங்குபவர்கள் வீட்டிலேயே போய் குடிக்க வேண்டும் எனவும், எந்த காரணத்தை கொண்டும் இங்கே மதுபாட்டில்களை திறக்க கூடாது எனவும் கட்டளை விதித்துள்ளனர். இதை மீறுபவர்களுக்கு சரக்கு விற்க மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

நம்முடைய குடிமகன்களும் சரக்கு மீதிருந்த அதீத காதலால் இதை அப்படியே செய்துள்ளனர்.  முண்டியடித்து ஓடும் குடிமகன்கள் குவார்ட்டர் ரூ.500 என கூறுவதையும் பொருட்படுத்தாமல் ஒருவர் 10 முதல் 15 பாட்டில்கள் வரை வாங்குகிறார்கள். பயந்து பயந்து வாங்கும் குடிமகன்களிடம் போலீஸ் வருவதாகவும் கூறுவதால் சரக்கு வாங்கிவிட்டு அனைவரையும் ஓடி விடுகின்றனர்.

வீட்டிற்கு போய் பாட்டிலை திறந்து குடித்தால் போதை ஏறாமல், கசாயம் போல் இருக்கவே கடுப்படைந்துள்ளனர் குடிமகன்கள். பின்னர் பாட்டில்களில் இருந்த மீதி சரக்கை சோதித்து பார்த்த போது தான, அது நில வேம்பு கசாயம் என தெரியவந்தது.

சரக்கு இல்லாமல் வாடியவர்களை தற்போது காசு இழந்தவர்களாவும் ஆக்கியுள்ளனர் மூளை உள்ள சில கும்பல். கடந்த வாரத்தில் ஒரு சில பகுதிகளில் சுக்கு காபியை அடைத்து விற்று குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தினர். இந்த நிலையில் நிலவேம்பு கசாயத்தை அடைத்து மேலும் தங்களை ஏமாற்றிய கும்பலின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  தங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர் சில குடிமகன்கள்.

Tags : #LIQOUR