நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: முதல் வெற்றியை பதிவு செய்தது மக்கள் நீதி மய்யம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
![Tamilnadu Election Results : MNM Registered first victory Tamilnadu Election Results : MNM Registered first victory](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-tamilnadu-election-results-mnm-registered-first-victory.jpg)
சேலம் மாநகராட்சி தேர்தல் - திருநங்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.. மாற்றம் தொடங்கிவிட்டது
ஆரம்பம் முதலே பல இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது. நடிகர் கமல்ஹாஸனின் மக்கள் நீஇ மய்யம் இந்த தேர்தலில் தனித்து களம் காண்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, பல இடங்களுக்கு சென்ற கமலஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
முதல் வெற்றி
இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருவாரூர் நகராட்சியின் முதல் வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தேர்தல் முடிவுகள்: அதிமுகவை வீழ்த்தி மலர்ந்த தாமரை.. கடைசி நேரத்தில் நடந்த ஏமாற்றம்..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)