'பஸ் ஸ்டாண்ட் ப்ளாட்பார்ம்ல...' 'திடீர்னு நியூஸ் பேப்பர விரிச்சு எழுத தொடங்கிய வாலிபர்...' 'அதுக்கு பின்னால இருந்த பெரும் சோகம்...' - நெகிழ வைத்த சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 06, 2021 07:57 PM

கல்லூரி தேர்வை எழுத போதிய வசதி இல்லாததால் நண்பரின் உதவியோடு பேருந்து நிலையத்தில் அரியர் எக்ஸாம் எழுதிய மாணவரின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

nagercoil student who wrote the arrear exam at the bus stand

நாகர்கோவில் தக்கலை பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் இளைஞர் ஒருவர் பேப்பர்களை விரித்து அதில் ஏதோ அவசரம் அவசரமாக எழுதிக்கொண்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும் பலர் கண்டும் காணமல் சென்றனர்.

இந்த நிலையில் அந்த இளைஞர் குறித்த செய்து அனைத்து ஊடங்களிலும் பரவி வைரலாகி வருகிறது. மேலும் அந்த இளைஞர் அப்போது தன்னுடைய பல்கலைக்கழக தேர்வை எழுதிக் கொண்டிருந்துள்ளார்.

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அரிசந்திரன் என்பவரின் மகன் 29 வயதான ரமேஷ். இவரின் இரண்டு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு திருமணமான நிலையில், வறுமையிலும் பெற்றோர் பனிரெண்டாம் வகுப்பு வரை ரமேஷை படிக்க வைத்துள்ளனர். மேலும் ரமேஷிற்கு தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் தன்னை பி.ஏ. தமிழ் பட்ட படிப்பில் சேர்க்க தனது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வராத நிலையில் தனது நண்பர்களின் உதவி மற்றும் சிறு சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்திருந்த பணம் மூலம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்தார்.

அதைத்தொடர்ந்து எம்.ஏ தமிழ் படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் மீண்டும் கூலி வேலைக்கே சென்றுள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன் அதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் மேற்படிப்பிற்கு சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் முதலாமாண்டு முதல் செமஸ்ட்டரில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாட பிரிவை தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்த போது கொரோனா காலம் இவருக்கு தடையாக இருந்தது.

தனது வீட்டில் ஆன்லைன் மொபைல் வசதியும் இல்லாத நிலையில் பலரிடம் உதவியும் கேட்டு கிடைக்காதததால், கடைசியாக நேற்று தக்கலை வந்த ரமேஷ் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை தேடி கண்டுபிடித்து அவர் மூலமாக கேள்வி தாள்களை பதிவிறக்கம் செய்து பரிச்சை எழுதியுள்ளார்.

இதுகுறித்து ரமேஷிடம்  கேட்டபோது, தமிழில் முனைவர் பட்டம் பெறுவதே நோக்கம் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்தான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nagercoil student who wrote the arrear exam at the bus stand | Tamil Nadu News.