'புரொஃபஸர் ரோலுக்கு வேற யாரு, நம்ம 'வாத்தி' தான்'... முதல் முறையா மனம் திறந்த 'ரோட்ரிகோ'... BEHINDWOODSக்கு கொடுத்த அசத்தல் INTERVIEW!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்துள்ள வெப் சீரிஸ் தான் 'மனி ஹெய்ஸ்ட்'. இந்தியாவிலும் இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த வெப் சீரிஸின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் தங்களது பொழுதை வெப் சீரிஸ் பார்ப்பது மற்றும் படங்கள் பார்ப்பது என கழித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ஹிட் அடித்த வெப் சீரிஸ் தான் மனி ஹெய்ஸ்ட். அலெக்ஸ் பினா என்பவரின் கற்பனையில் உதித்த ‘மனி ஹெய்ஸ்ட்’ ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது.
வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் 8 கொள்ளையர்களையும் அவர்களை வழிநடத்தும் ‘ப்ரொஃபஸர்’ என்ற ஒருவரையும் சுற்றி நடப்பது தான் இதன் கதை. இந்த வெப் சீரிஸ் வெளியானது முதல் பல ரசிகர்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டது. அதுவும் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பலரும் இது குறித்துப் பேச ஆரம்பித்தார்கள். நீ மனி ஹெய்ஸ்ட் பாக்குறது இல்லையா என பலரும் கேட்கும் அளவிற்கு நெட்ஃப்ளிக்ஸில் இது தான் தற்போது ட்ரெண்டிங்.
இந்நிலையில் மனி ஹெய்ஸ்ட் இயக்குநரைத் தொடர்பு கொண்ட 'Behindwoods Team', வீடியோ கால் மூலமாக, ரசிகர்களுக்குப் பல சுவாரசிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமாக இந்தியத் திரை நட்சத்திரங்களில் யார் எந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என, இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ அல்டிமேட்டாக பதிலளித்துள்ளார்.
புரொஃபஸர் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய்யும், பெர்லின் கதாபாத்திரத்திற்குப் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கும், பொகோட்டா கதாபாத்திரத்திற்கு அஜித்தும், போலீஸாக வரும் சுவாரஸ் கதாபாத்திற்கு சூர்யாவுக்கும் கச்சிதமாக இருப்பார்கள் எனப் பதிலளித்துள்ளார். இதன் முழு உரையாடலைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து காணலாம்.