மொத்தமாகக் குவிந்த 'தென்னிந்திய' நட்சத்திரங்கள்... தனுஷை 'கட்டித்தழுவிய' சிவகார்த்திகேயன்... EXCLUSIVE PHOTO வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 14, 2019 11:25 PM

பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய 7-வது கோல்டு மெடல் விருதுகள் விழா கடந்த 8-ம் தேதி சென்னையில்  நடைபெற்றது. விழாவில் ஷங்கர், தனுஷ், ஜோதிகா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ராம்சரண், யஷ், நிவின் பாலி, விஜய் தேவரகொண்டா, வெற்றிமாறன், அமீர், செல்வராகவன், பார்த்திபன், சேரன், லோகேஷ் கனகராஜ், போனி கபூர், மஞ்சு வாரியர், அமலாபால், சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Behindwoods Gold Medals Award 2019: Celebrities Exclusive Photo Video

அதேபோல முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், நட்சத்திர பேச்சாளர் சாலமன் பாப்பையா, இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் அதிகாரி பிரித்திகா யாஷினி, திருநங்கைகள் மேன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கிரேஸ் பானு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மாபாகா ஆனந்த், பிரியங்கா மற்றும் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்த விருதுகள் விழா சென்னை டிரேட் செண்டரில் நடைபெற்றது. இதில் சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், சமூக மேன்மைக்காக உழைப்பவர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு கண்டுகளித்த இவ்விழாவின் சிறப்பு தருணங்கள் அடங்கிய புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தற்போது பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

விரைவில் முழு வீடியோவும் உங்கள் அபிமான பிஹைண்ட்வுட்ஸ் டிவியில் (யூடியூப்) வெளியாகும். இதுவரை நீங்கள் பிஹைண்ட்வுட்ஸ் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் உடனடியாக சேனலை சப்ஸ்கிரைப் செய்து பிஹைண்ட்வுட்ஸின் எஸ்க்ளுசிவ் வீடியோக்களை கண்டுகளியுங்கள்!