இது புதுசா இருக்குண்ணே.. கல்யாண மண்டபம் கொடுத்த விநோத ஆஃபர்.. ஆச்சர்யப்பட்டுப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் திருமண மண்டபம் ஒன்று வித்தியாசமான ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.
Also Read | காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. கேரளாவையே நடுங்க வச்ச இளம்பெண்.. பகீர் சம்பவத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
பொதுவாக இந்தியாவில் திருமணம் என்பது பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. உறவினர்கள், நண்பர்கள் என திரளும் கூட்டங்களை சமாளிக்க மண்டபங்கள் தான் வசதியானவை. இதன் காரணமாகவே, திருமணங்களை கல்யாண மண்டபங்களில் நடத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் கல்யாண தேதியில் இருந்து பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும்.
குறிப்பாக வீட்டுக்கு அருகில் இருக்கும் மண்டபங்களை ஆராயும் மக்கள், அதன் பின்னர் பட்ஜெட் பற்றியும் தங்களுக்குள் விவாதம் நடத்துவர். இப்படி திருமணத்திற்கான வேலைகள் கணிசமான நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொள்பவை. அந்த வகையில், திருமணங்களுக்காக மண்டபம் தேடுபவர்களுக்கு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது காஞ்சிபுரத்தை சேர்த்த கல்யாண மண்டபம் ஒன்று.
காஞ்சிபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது குருவி மலை. இங்குள்ள பன்னீர் மஹால் என்னும் மண்டபம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, இந்த மண்டபத்தை திருமணத்திற்காக பதிவு செய்பவர்களுக்கு, வளைகாப்புக்கு இலவசமாக மண்டபம் அளிக்கப்படும் என இந்த மண்டப நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
பொதுவாக வளர்ந்துவிட்ட டெக்னாலஜி உலகில் நாம் வாங்கும் பொருட்களுக்கு இலவசம் அளித்து நாம் பார்த்திருப்போம்.ஆன்லைன் வணிகம் பரவலாகிவிட்ட இந்த காலத்தில் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட முக்கிய தினங்களில் அதிரடி ஆஃபர்களோடு பொருட்களை விற்பனை செய்து வருவதையும் நாம் கண்டுவருகிறோம். ஆனால், திருமண மண்டபத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆஃபர் மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த திருமண மண்டபத்தில் கல்யாணத்திற்கு 75,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. வளைகாப்புக்கு 25,000 ரூபாய் வசூலிப்பதாக சொல்லப்படும் நிலையில், திருமணத்திற்காக பதிவு செய்பவர்களுக்கு, வளைகாப்புக்கு இலவசமாக மண்டபம் அளிக்கப்படும் என இந்த மண்டப நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதற்கான கட்-அவுட்களை மண்டபத்தின் வாசல்களிலும் நிறுவியுள்ளது நிர்வாகம். இந்த வழியாக செல்லும் மக்கள் இந்த அறிவிப்பை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். இதனிடையே இந்த கட்-அவுட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.