தமிழகத்தின் 'நான்கு' மாவட்டங்களில் 'கனமழை' பெய்ய போகுது...! - வானிலை ஆய்வுமையம் தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் நான்கு தென் மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
![Heavy rains lashed four southern districts of Tamil Nadu Heavy rains lashed four southern districts of Tamil Nadu](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/heavy-rains-lashed-four-southern-districts-of-tamil-nadu.jpg)
தமிழகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதோடு, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தருமபுரி பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறபட்டுள்ளது.
அதோடு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் காரணத்தால் வடமேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன் வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'ஜாவத்' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒடிசாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அதோடு இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புரி கடலோர பகுதியில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)